கடந்த 1990 ஆம் ஆண்டு, விண்வெளியில் செலுத்தப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் பல்வேறு புகைப்படங்களை எடுத்து வருகிறது. அதனை நாசா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த, பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, இரு விண்மீன் மண்டலங்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது 'வைல்ட் ட்ரிபிலெட்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புகைப்படத்தில், இரு விண்மீன் மண்டலங்களும், ஒன்றோடு மற்றொன்று ஈர்க்கப்படுவது துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இரு விண்மீன் மண்டலங்கள் ஈர்க்கப்படும் போது, இடையில் லூமினஸ் பாலம் ஏற்படும். அதனையும் இந்த தொலைநோக்கி தெளிவாக படம் பிடித்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் விண்மீன் மண்டலங்கள் குறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் என்று நம்பப்படுகிறது.