ஊபர் எனப்படும் கார் வாடகை சேவையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் ஆயிரம் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளது.அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையாக கொண்டு செயல்படும் ஊபர் நிறுவனம் உலகின் பல நாடுகளில் வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இது உணவு விநியோகத்திலும், சரக்கு போக்குவரதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இதனை ஒட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் டிரைவர்களின் குழந்தைகளில் ஆயிரம் பேருக்கு ஆரம்ப கல்வியில் இருந்து முதுநிலை கல்வி வரைக்கான செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறது. இதில் அக்கழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து செலவீனங்களும் அடங்கும்.
மேலும் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் நூறு டிரைவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊபர் நிறுவனத்தின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.














