கனடா - ஊபர் ஈட்ஸ் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை

October 18, 2022

கனடா நாட்டில், பிரபல உணவு விநியோகச் சேவைகள் வழங்கும் ஊபர் ஈட்ஸ் மூலம், சட்டபூர்வமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், நேரடியாக, வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று மரிச்சுவானா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒரு உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்வது போலவே, போதை பொருட்களுக்கான சில்லறை வணிகர்களின் தளத்தில் இருந்து போதை பொருட்கள் ஆர்டர் செய்யலாம். ஆனால், 19 வயது நிரம்பியவர்கள் […]

கனடா நாட்டில், பிரபல உணவு விநியோகச் சேவைகள் வழங்கும் ஊபர் ஈட்ஸ் மூலம், சட்டபூர்வமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், நேரடியாக, வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று மரிச்சுவானா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, ஒரு உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்வது போலவே, போதை பொருட்களுக்கான சில்லறை வணிகர்களின் தளத்தில் இருந்து போதை பொருட்கள் ஆர்டர் செய்யலாம். ஆனால், 19 வயது நிரம்பியவர்கள் மட்டுமே ஆர்டர் செய்யலாம் என்ற எச்சரிக்கை செய்தி விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்களை தனிப்பட்ட ஓட்டுநர் மூலம் விநியோகம் செய்வதற்கு பதிலாக, நேரடியாக, சில்லறை வணிகம் செய்யும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விநியோகம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் விநியோகம் செய்யும் பொழுது, வாங்குபவரின் வயது 19 வயதுக்கு மேற்பட்டதா என்பதை உறுதி செய்து, ஊழியர் விநியோகம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வணிகத்திற்காக, ஊபர் ஈட்ஸ் நிறுவனம், லீஃபி என்ற போதை பொருள் விற்பனை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. முதற்கட்டமாக, கனடாவின் டொரன்டோ பகுதியில் விற்பனை செயல்படுத்தப்படுகிறது. மேலும், மூன்று சில்லறை போதை பொருள் வணிகர்கள் மட்டுமே தற்போதைய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவாஸ் ரோஸ், மினர்வா கன்னாபிஸ் மற்றும் ஹிடன் லீப் கன்னாபிஸ் ஆகிய விற்பனை தளங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் லோலா காசிம், “போதைப் பொருள் விற்பனைக்காக லீஃபி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். இந்த வணிகத்தின் மூலம், சட்டவிரோத போதைப்பொருள் சந்தையை முடக்க முடியும். அத்துடன், போதையில் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார். மேலும், லீஃபி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, இது குறித்து, “சட்டப்பூர்வ போதைப் பொருள் வணிகத்தில், சுமார் 200 சில்லறை வணிகர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். கன்னடியன் கன்னாபிஸ் வணிகச் சந்தையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu