இணையவழி டாக்ஸி சேவை வழங்கும் ஊபர் நிறுவனம், பொது முடக்கம் காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து, பொது முடக்கங்கள் நீக்கப்பட்டதால், கடந்த நிதியாண்டில், ஊபர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, 7.1% வருவாய் உயர்வை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் 396.95 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. ஊபர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 388.23 கோடி ஆகும். முந்தைய நிதி ஆண்டின் செயல்பாட்டு வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 30% உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊபர் நிறுவனம், கடந்த நிதி ஆண்டில், தனது செலவுகளை வெகுவாக குறைத்துள்ளது. குறிப்பாக, பணியாளர் நலன் சார்ந்த செலவுகள் 44% குறைக்கப்பட்டு, 150.96 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் விளம்பரத்துக்காக செலவிடப்படும் தொகை மூன்று மடங்கு குறைக்கப்பட்டு, 43.93 கோடியாக பதிவாகியுள்ளது. வருடாந்திர அடிப்படையில் நிறுவனத்தின் செலவுகள் 13.4% குறைக்கப்பட்டு, 83.07 கோடியாக பதிவாகியுள்ளது.