கிரெடிட் சூயிஸ் வங்கியை யுபிஎஸ் வாங்க முடிவு

March 20, 2023

கடந்த வாரம் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட கிரெடிட் சூயிஸ் வங்கியை, யூபிஎஸ் முதலீட்டு நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும், ஸ்விஸ் நேஷனல் பேங்க் இதற்காக 100 மில்லியன் டாலர்களை யுபிஎஸ் நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரு நிதி நிறுவனங்களும் ஸ்விட்சர்லாந்துக்கு முக்கியம் என்பதால், இந்த வரலாற்று ஒப்பந்தத்திற்காக நாட்டின் சட்டங்களை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரெடிட் சூயிஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பிற்கு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக நாளின் இறுதியில், […]

கடந்த வாரம் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட கிரெடிட் சூயிஸ் வங்கியை, யூபிஎஸ் முதலீட்டு நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும், ஸ்விஸ் நேஷனல் பேங்க் இதற்காக 100 மில்லியன் டாலர்களை யுபிஎஸ் நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரு நிதி நிறுவனங்களும் ஸ்விட்சர்லாந்துக்கு முக்கியம் என்பதால், இந்த வரலாற்று ஒப்பந்தத்திற்காக நாட்டின் சட்டங்களை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிரெடிட் சூயிஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பிற்கு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக நாளின் இறுதியில், இந்த வங்கி 8 பில்லியன் டாலர்கள் அளவில் சந்தை மதிப்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிரெடிட் சூயிஸ் வங்கி வாங்கப்படுவதால், அதன் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பானதாக மாறும் என்று கருதப்படுகிறது. எனவே, ஐரோப்பிய சந்தையின் சரிவு நிலை விரைவில் சீராகும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu