கடந்த மார்ச் 19ஆம் தேதி, திவால் நிலையில் இருந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை யுபிஎஸ் வங்கி கையகப்படுத்தியது. இதன் மூலம், சர்வதேச அளவிலான நிதிச் சிக்கல் தவிர்க்கப்பட்டது. அதே வேளையில், இந்த இணைப்பு காரணமாக, கிட்டத்தட்ட 36000 பேர் வேலை இழக்கக்கூடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
“இரு வங்கிகளின் இணைப்பால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை சமாளிக்க முன்னாள் தலைமை செயல் அதிகாரி செர்கியோ எர்மொட்டியை மீண்டும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று யுபிஎஸ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், வங்கியில் பணி செய்து வரும் 25000 முதல் 36000 பேர் வரை நீக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. இது வங்கியின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 20% முதல் 30% ஆகும். குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் மட்டுமே 11000 பேர் பணி இழக்கக்கூடும் என கருதப்படுகிறது.