இந்தியாவின் 4வது பெரிய வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கியின் தோற்றுநர் உதய் கோட்டக், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோட்டக் மஹிந்திரா வங்கியின் பொது மேலாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகிய பதவிகளில் இருந்து அவர் விலக உள்ளார். வரும் டிசம்பர் மாதம் முதல் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் வங்கி, தனியார் வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுக்கான பதவி காலம் 15 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளது. அதன்படி, உதய் கோட்டக் பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான உதய் கோட்டக், இந்தியாவின் பணக்கார வங்கி முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவி விலகினாலும், வங்கியின் நிர்வாகக் குழுவில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.