காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் 15 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். சக்தி சுகர்சில் இருந்து கிளம்பும் உதயநிதி ஸ்டாலின் குமலன்குட்டை, முருகேசன் நகர், இடையன் காட்டுவலசு, பிரபா தியேட்டர் வழியாக முனிசிபல் காலனி கருணாநிதி சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை மாலை அரசு ஆஸ்பத்திரி அருகே 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு எஸ்.கே.சி.ரோடு கிராம்படை வழியாக மணல்மேடு பகுதி, மரப்பாலம் மண்டபம் வீதி உள்ளிட்ட ஈரோட்டின் அனைத்து பகுதிகளில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்கிறார்.