மகளிர் மேம்பாட்டு நிறுவன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசு

மகளிர் மேம்பாட்டு நிறுவன போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார். பல்வேறு தடைகளை கடந்து சாதனைகள் படைத்து வரும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, சுய உதவி குழுவினை சேர்ந்த பெண்கள் தங்களின் […]

மகளிர் மேம்பாட்டு நிறுவன போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

பல்வேறு தடைகளை கடந்து சாதனைகள் படைத்து வரும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, சுய உதவி குழுவினை சேர்ந்த பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டி, கவிதை போட்டி, குழு நடனம், குழு பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu