பிரதமர் மோடியை நாளை மாலை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

February 27, 2023

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை சந்திக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி சென்றார். இன்று மாலை 3 மணியளவில் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் […]

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை சந்திக்கிறார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி சென்றார். இன்று மாலை 3 மணியளவில் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். இதைத் தொடர்ந்து இன்று இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியையும் சந்திக்க இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu