அங்கீகரிக்கப்படாத 20 போலி பல்கலைக்கழகங்கள் - யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல்

August 3, 2023

யு.ஜி. சி எனும் பல்கலைகழக மானியக்குழு நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக கூறியுள்ளது. பல்கலைக்கழகம் மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி. அமைப்பிற்கு புகார்கள் எழுந்தது. இந்த வகை நிறுவனங்கள் எந்த ஒரு டிகிரியையும் வழங்க அனுமதி இல்லை. இந்த போலி பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் பட்டங்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றிற்கு எந்த விதத்திலும் செல்லுபடியாகவோ, அங்கீகரிக்கவோ பட மாட்டாது. இதில் டெல்லியில் மட்டும் 8 […]

யு.ஜி. சி எனும் பல்கலைகழக மானியக்குழு நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக கூறியுள்ளது.

பல்கலைக்கழகம் மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி. அமைப்பிற்கு புகார்கள் எழுந்தது. இந்த வகை நிறுவனங்கள் எந்த ஒரு டிகிரியையும் வழங்க அனுமதி இல்லை. இந்த போலி பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் பட்டங்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றிற்கு எந்த விதத்திலும் செல்லுபடியாகவோ, அங்கீகரிக்கவோ பட மாட்டாது. இதில் டெல்லியில் மட்டும் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்களும், இதை தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா மேற்கு வங்காளம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பல போலி பல்கலைக்கங்கள் இருப்பதாக யு.ஜி.சி.அறிவித்துள்ளது

இதில் அகில இந்திய பொது மற்றும் உடல்நல அறிவியல், நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம்,தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொருளியல் நிறுவனம், சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா, ஆன்மீக பல்கலைக்கழகம் ஆகியவை போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu