ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் யுஜிசி நெட் மறுதேர்வு

யுஜிசி நெட் மறு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் தேசிய தேர்வு முகமை சார்பில் நெட் தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது ஆண்டுக்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜூன் பருவத்திற்கான முதல் கட்ட நெட் தேர்வு நடைபெற்றது. ஒன்பது […]

யுஜிசி நெட் மறு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் தேசிய தேர்வு முகமை சார்பில் நெட் தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது ஆண்டுக்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜூன் பருவத்திற்கான முதல் கட்ட நெட் தேர்வு நடைபெற்றது.
ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதிய நிலையில் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வினை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. அதில் தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுஜிசி நெட் மறு தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் கம்ப்யூட்டர் முறையில் நடைபெறும் NSET தேர்வு ஜூலை 10ஆம் தேதியும், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu