பிரிட்டனில் மைக்ரோசாப்ட் - ஆக்டிவிசன் ஒப்பந்தத்திற்கு தடை

April 28, 2023

கேண்டி க்ரஷ், கால் ஆஃப் டியூட்டி போன்ற வீடியோ கேம்களை உருவாக்கிய ஆக்டிவிசன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்த இருந்தது. சுமார் 69 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரிட்டன் அரசு இந்த ஒப்பந்தத்திற்கு தடைவிதித்துள்ளது. சர்வதேச நாடுகளில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். எனவே, பிரிட்டனின் தடையால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, கிளவுட் […]

கேண்டி க்ரஷ், கால் ஆஃப் டியூட்டி போன்ற வீடியோ கேம்களை உருவாக்கிய ஆக்டிவிசன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்த இருந்தது. சுமார் 69 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரிட்டன் அரசு இந்த ஒப்பந்தத்திற்கு தடைவிதித்துள்ளது. சர்வதேச நாடுகளில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். எனவே, பிரிட்டனின் தடையால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கனவே, கிளவுட் கேமிங் சந்தையில் மைக்ரோசாப்ட் முன்னணியில் உள்ளது. தற்போது, ஆக்டிவிசன் நிறுவனமும் மைக்ரோசாப்டின் கீழ் இயங்கும் போது, கிளவுட் கேம்மிங் துறையில் மைக்ரோசாப்டுக்கு ஏகாதிபத்திய ஆதிக்கம் ஏற்படும். அதற்காகவே இந்த தடை விதிக்கப்படுவதாக பிரிட்டனின் நிறுவனப் போட்டி மற்றும் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் தடைக்கு மைக்ரோசாப்ட் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu