உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி அளித்துள்ளது.
ஜெலென்ஸ்கி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். இதையடுத்து ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து அறிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பிற்கு உதவும் வகையிலும், போரின் போக்கை மாற்றும் முயற்சியாகவும் மேலும் நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இங்கிலாந்து வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.














