ரிசசன் பிடியில் இருந்து பிரிட்டன் நாடு தப்பித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதனால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் ஆறுதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் வருங்கால தேர்தலில் அவருக்கான ஆதரவை பெற்று தரும் என நம்பப்படுகிறது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், பிரிட்டனின் ஜிடிபி வளர்ச்சி 0.6% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 1.5% ஆக பதிவான ஜிடிபி வளர்ச்சியே உயர்ந்ததாக இருந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த இங்கிலாந்தை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து ரிஷி சுனக் பதவியேற்றார். அதன்படி, பிரிட்டனின் பொருளாதார நிலை மீட்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.














