கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பிரிட்டனின் பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குள் வந்தடைந்துள்ளது. இதனால், பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் ஆறுதல் கிடைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த மே மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் பணவீக்கம் 2% என்ற இலக்குக்குள் பதிவாகியுள்ளது. வரும் மாதங்களில் பிரிட்டனில் தேர்தல் நடைபெறும் சூழலில் இந்த செய்தி ரிஷிஷ் சுனக்குக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என கருதப்படுகிறது. பணவீக்கம் தொடர்பான அச்சுறுத்தல்கள் ஏப்ரல் மாத 5.9% ல் இருந்து மே மாதத்தில் 5.7% ஆக குறைந்துள்ளது. பேங்க் ஆப் இங்கிலாந்து இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.