பிரிட்டன் - ஜூன் மாத பணவீக்கம் 7.9% ஆக சரிவு

July 19, 2023

பிரிட்டன் நாட்டில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில், பிரிட்டனின் பணவீக்கம் 7.9% ஆக சரிவடைந்துள்ளது. எனவே, இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கிக்கு அழுத்தம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்துவதில் எழுந்த சர்ச்சைகள் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஜூன் மாத பணவீக்கம், பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வருடத்தின் மிகவும் குறைவான பணவீக்கமாக ஜூன் மாத பணவீக்கம் […]

பிரிட்டன் நாட்டில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில், பிரிட்டனின் பணவீக்கம் 7.9% ஆக சரிவடைந்துள்ளது. எனவே, இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கிக்கு அழுத்தம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்துவதில் எழுந்த சர்ச்சைகள் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஜூன் மாத பணவீக்கம், பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வருடத்தின் மிகவும் குறைவான பணவீக்கமாக ஜூன் மாத பணவீக்கம் இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தாலும், 8.2% அளவில் பணம் வீக்கம் பதிவாகலாம் என்று கருதப்பட்டது. ஆனால், 7.9% அளவில் பணவீக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக, உணவு பணவீக்கம் மிகுந்த சரிவை சந்தித்துள்ளது. ஜூன் மாதத்தில் இது 17.3% ஆக பதிவாகியுள்ளது. மற்ற துறைகளை விட இது மிகவும் அதிகம் என்றாலும், மே மாதத்தின் 18.3% உடன் ஒப்பிடுகையில், கணிசமான சரிவாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் பணவீக்கம் குறைந்து வரும் என கருதப்படுகிறது. மேலும், பிரதமர் ரிஷி சுனக் வாக்களித்திருந்த படி, 2024 ஆம் ஆண்டுக்குள் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu