பிரிட்டன் - தவறான பொருளாதார கொள்கைகளுக்காக மன்னிப்பு கேட்ட லிஸ் ட்ரஸ்

October 18, 2022

கடந்த செப்டம்பர் மாதம், பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். சரிந்து வரும் பிரிட்டனின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவர் முன் வைக்கப்பட்ட முக்கிய சவாலாக இருந்தது. இந்நிலையில், பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்த பல அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் வெளியிட்டார். முக்கியமாக, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் கொண்டு வரப்பட்டது. அவரது புதிய பொருளாதாரக் கொள்கையால், பிரிட்டனின் பொருளாதார நிலை உயரும் என்று கருதப்பட்ட நிலையில், பிரிட்டனின் பொருளாதாரம் மேலும் சறுக்கல்களை சந்தித்தது. […]

கடந்த செப்டம்பர் மாதம், பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். சரிந்து வரும் பிரிட்டனின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவர் முன் வைக்கப்பட்ட முக்கிய சவாலாக இருந்தது. இந்நிலையில், பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்த பல அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் வெளியிட்டார். முக்கியமாக, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் கொண்டு வரப்பட்டது. அவரது புதிய பொருளாதாரக் கொள்கையால், பிரிட்டனின் பொருளாதார நிலை உயரும் என்று கருதப்பட்ட நிலையில், பிரிட்டனின் பொருளாதாரம் மேலும் சறுக்கல்களை சந்தித்தது. டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு வேகமாக குறைந்தது. அத்துடன், பிரிட்டன் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது.

பிரிட்டனின் பொருளாதார சிக்கலுக்கு லிஸ் ட்ரஸ் கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. இதனால், அங்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டது. தற்போது, அதனை எதிர்கொள்ளும் வகையில், லிஸ் ட்ரஸ் உரையாற்றி உள்ளார். தனது உரையில், “நான் எனது கடமைகளை முழு பொறுப்புடன் ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளையில், தவறான பொருளாதார கொள்கைகளை கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். நமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக நான் கொண்டு வந்த திட்டங்கள் சறுக்கல்களை சந்தித்த போதும், நல்ல தலைவராக, முன் நின்று அதனை எதிர்கொண்டு பொருளாதாரத்தை சீர் செய்ய உரிய முயற்சிகளை முன்னெடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, நிதி அமைச்சர் கவாசியை லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். பொருளாதாரக் கொள்கைகள் குறித்த தவறான ஆலோசனைக்காக அவரை நீக்கியதாக கூறப்பட்டது. பின்னர், வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜெர்மி, பிரிட்டன் நாட்டின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற உடன், கடந்த மாதம் கவாசி கொண்டு வந்த வரிச்சலுகைகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும், புதிய பட்ஜெட் அக்டோபர் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

“பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் முழுவதுமாக பொறுப்பில் இல்லை; அவர் பிறரால் ஆட்டுவிக்கப்படுகிறார்” என்று சர்வதேச ஊடகங்கள் கருத்து கூறி வருகின்றன. அதற்கு பதிலளிக்கும் விதமாக, “நான் கவாசியின் தவறான ஆலோசனைகளால் சில முடிவுகளை எடுத்தேன். அதன் விளைவுகளால் பிரிட்டன் பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது, அதன் காரணமாகவே கவாசியை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஜெர்மியை பொறுப்பில் நியமித்துள்ளேன். நான் எனது பொறுப்பில் இருந்து விலகவில்லை. எனது சுயத்துடன் பணியாற்றுகிறேன்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu