இங்கிலாந்தில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தோ்தலில் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்தது.இங்கிலாந்தில் மிட் பெட்போர்ட்ஷயர், டாம் வொர்த் ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்தது. அந்த இரு தொகுதிகளையும் தொழிலாளர் கட்சி வென்றுள்ளது. பொதுவாகவே இங்கிலாந்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இடைத்தேர்தல் அரசின் செயல்பாடு குறித்து நடத்தப்படும் பொது வாக்கெடுப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய கோட்டையாக கருதப்படும் இந்த இரு தொகுதிகளையும் தொழிலாளர் கட்சி கைப்பற்றி இருக்கிறது. இது பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஒரு பின்னடைவு என்று கருதப்படுகிறது.














