செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் தாவரவியல் பூங்காவை அமைக்க இங்கிலாந்து அரசுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பூர்வீக அரிய வகை மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதற்காக, தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகரில் உள்ள கடம்பூர் என்னும் கிராமத்தில் தொடங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப பங்களிப்புடன் இங்கிலாந்து - தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன் மற்றும் இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல்,உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை மந்திரி தெரஸ் கோபே ஆகியோர்கள் முன்னிலையில் அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் கியூ கார்டன் இயக்குனர் ரிச்சர்ட் டெவெரல் ஆகியோருக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது எதிர்காலத்தில் தொழிற்சாலைகளில் பசுமை மதிப்பீடு வரையளவில் பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல அந்தஸ்தை பெற தானாக முன்வர எடுக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்று என்பதை தெரிவித்துள்ளனர்.














