இங்கிலாந்தின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியா

November 10, 2023

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் சிலர் படகுகள் மூலமாகவும் வேறு சில வழிகளிலும் அடைக்கலம் கேட்டு இங்கிலாந்துக்கு விண்ணப்பம் செய்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. சட்டவிரோத குடியேற்றம் சட்டம் 2023-ன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் […]

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து விரைவில் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் சிலர் படகுகள் மூலமாகவும் வேறு சில வழிகளிலும் அடைக்கலம் கேட்டு இங்கிலாந்துக்கு விண்ணப்பம் செய்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. சட்டவிரோத குடியேற்றம் சட்டம் 2023-ன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் இணைக்க உள்ளது இங்கிலாந்து அரசு.

சமீப காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர். எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கிலாந்து அரசு இதனை தடுக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu