பிரிட்டனில், அரசாங்கத் தளங்களில் சீன கண்காணிப்பு கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன தயாரிப்புகளை நீக்குவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், அரசாங்க தளங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கருவிகளை நீக்குவதற்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, குறிப்பிட்ட 2 சீன நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு பிரிட்டன் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் மூலம், தனி மனித உரிமைகளுக்கு பாதிப்பு நேர்வதாக தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பிரிட்டன் அரசின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.