ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஐந்து புதிய கடற்படைக் கப்பல்களை பெற பிரிட்டன் 4.9 பில்லியன் டாலர்கள் செலவழிக்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன் மற்றும் நட்பு நாடுகள் தங்களது பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது குறித்து இங்கிலாந்து பிரதமர் சுனக் கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகள் நம் அனைவரையும் ஆபத்தில் கொண்டு போயுள்ளது. உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குவதால், எங்களையும் எங்கள் கூட்டாளிகளையும் பாதுகாக்க போர்க்கப்பல்களை வாங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த தலைமுறை பிரிட்டிஷ் போர்க்கப்பல்களை உருவாக்குவதும் இதில் அடங்கும்." என்றார்.
மேலும் 2030 களின் நடுப்பகுதியில் எட்டு போர்க்கப்பல்கள் முடிவடையும் என்றும் மூன்று கப்பல்கள் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. ஜி 20 மாநாட்டிற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளியுறவு அமைச்சரை அனுப்புயுள்ளார்.














