கிரீமியாவில் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய கருங்கடல் பகுதியில் கிரீமியா துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த துறைமுக பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. தூரத்தில் இருக்கும் உக்ரைன் இலக்குகள் மீது ஏவுகணைகள் இங்கிருந்து தான் வீசப்படுகின்றன.
இந்நிலையில், கிரீமியாவில் உள்ள இரண்டு ரஷ்ய போர் கப்பல்களை அழித்துவிட்டதாகவும் இதன்மூலம் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டதாகவும் உக்ரையின் ராணுவம் கூறியுள்ளது. ஆனால் இந்த செய்தியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஐந்து கடல் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த தாக்குதல் குறித்த சேத விவரம் எதையும் ரஷ்யா வெளியிடவில்லை.