உக்ரைனில் அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக தூதரக அதிகாரி ஆண்ட்ரி சிபிஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஷியாவுடன் நடக்கும் போரில் வெற்றிக்கான உத்தியாக, அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றங்களை அறிவித்தார். 2022-ஆம் ஆண்டு போர் தொடங்கிய பிறகு, உக்ரைனில் இது மிகப் பெரிய அமைச்சரவை மாற்றமாகும். இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் டிம்த்ரோ குலேபா புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன், துணை பிரதமர் ஓல்ஹா ஸ்டெஃபானிஷினா, போர்த் திட்டத் தொழில்துறை அமைச்சர் ஒலெக்ஸாண்டார் காமிஷின், நீதித் துறை அமைச்சர் டெனிஸ் மாலியுஸ்கா, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருஸ்லான் ஸ்லேஸ் ஆகியோரும் பதவி விலகினர்.