ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, புடினிடம் போரை நிறுத்தும் படி கேட்டதற்கு உக்ரைன் போரை வி௫ம்புகிறது என்றும் புடின் கூறினார்.
எஸ்சிஓ மாநாட்டில் மோடியும் புடினும் சந்தித்தபோது உலக நாடுகளின் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக புடினிடம் போரை முடித்துக் கொள்ளுமாறு மோடி கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த புடின், உக்ரைன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்துவிட்டது . அதேசமயம் இராணுவ தாக்குதலைத் தொடர விரும்புகிறது என்று கூறினார். அத்துடன் இ௫நாடுகளுக்கு இடையேயான மோதலைப் விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் ௯றினார். இது குறித்து டுவீட் செய்துள்ள மோடி, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ௯றினார். புடினுடனான இந்த சந்திப்பில் ,வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக ௯றினார். மேலும் அப்பதிவில் போரின் ஆரம்பத்தில் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க உதவிய ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.














