துருக்கியில் நடந்த மாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை உக்ரைன் எம்.பி. தாக்கியுள்ளார்.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடந்த மாநாட்டின் போது, உக்ரைன் எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷிய பிரதிநிதியை தாக்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பின் பாராளுமன்ற சபையின் 61 வது பொதுச் சபையின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கிவ் போஸ்டின் சிறப்பு நிருபரும் அரசியல் ஆலோசகருமான ஜேசன் ஜே ஸ்மார்ட் இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.