உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக 12,000 ராணுவ வீரர்களை அனுப்பியதாக தென்கொரிய உளவியல் அமைப்பு கண்டறிந்துள்ளது.
தென்கொரியாவுக்கு எதிரான மோதல் போக்கை கடைபிடிக்கும் வடகொரியா, ஒவ்வொரு முறையும் ஏவுகணை சோதனைகள் நடத்தி கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதால், வடகொரியா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது. இதனால் பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பொருளாதார சவால்களை எதிர்கொண்டு இருக்கும் வடகொரியாவுக்கு ரஷியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. குறிப்பாக, ரஷியாவுடன் நெருங்கிய உறவுகள் கொண்ட வடகொரியா, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக 12,000 ராணுவ வீரர்களை அனுப்பியதாக தென்கொரிய உளவியல் அமைப்பு கண்டறிந்துள்ளது.














