2022 ன் சிறந்த மனிதர் ஜெலன்ஸ்கி - டைம்ஸ் இதழ் கௌரவிப்பு

December 8, 2022

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, 2022 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து, டைம்ஸ் இதழ் கௌரவித்துள்ளது. டைம்ஸ் இதழ், ஒவ்வொரு ஆண்டும், அரசியல், இலக்கியம், சமூக சேவை போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட ஒரு நபரை, அந்த ஆண்டின் சிறந்த நபராக அடையாளப்படுத்தி அட்டைப் படத்தில் வெளியிடும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் நாட்டு அதிபர் விலோதிமிர் ஜெலன்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படம் டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளது. டைம்ஸ் இதழின் […]

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, 2022 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து, டைம்ஸ் இதழ் கௌரவித்துள்ளது.

டைம்ஸ் இதழ், ஒவ்வொரு ஆண்டும், அரசியல், இலக்கியம், சமூக சேவை போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட ஒரு நபரை, அந்த ஆண்டின் சிறந்த நபராக அடையாளப்படுத்தி அட்டைப் படத்தில் வெளியிடும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் நாட்டு அதிபர் விலோதிமிர் ஜெலன்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படம் டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளது. டைம்ஸ் இதழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜெலன்ஸ்கி உக்ரைனின் உத்வேகம். அவரது தைரியத்தை நம்பி மொத்த நாடும் உள்ளது. போர்க்காலத்தில் சிறந்த தலைவராக அவர் வெற்றி பெற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu