உக்ரைனில் மேலும் ஒரு கிராமத்தை ரஷ்யா கைப்பற்றியது

May 3, 2024

உக்ரைனின் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பெட்டிசி கிராமத்தை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பெட்டிசி கிராமம் அருகே இருந்த அவுட்டீகா என்ற நகரை ரஷ்யா கைப்பற்றி இருந்தது. தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவ தளவாடங்கள் உட்பட […]

உக்ரைனின் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பெட்டிசி கிராமத்தை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பெட்டிசி கிராமம் அருகே இருந்த அவுட்டீகா என்ற நகரை ரஷ்யா கைப்பற்றி இருந்தது. தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவ தளவாடங்கள் உட்பட நிதி உதவி அளித்து வருகின்றன. எனவே, ரஷ்யா உக்ரைனை எதிர்ப்பதை தீவிரமாகியுள்ளது. விரைவில், உக்ரைனுக்கு அதிநவீன சக்தி வாய்ந்த ராணுவ உபகரணங்கள் வந்து சேர உள்ளது. அதற்கு முன்பாகவே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை முடிந்தவரை கைப்பற்ற ரஷ்யா நினைக்கிறது. இதன் காரணமாகவே ரஷ்ய படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனர் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu