உக்ரைன் மின் கட்டமைப்பின் மீது ரஷ்யா கடும் தாக்கு

March 30, 2024

உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா மீண்டும் பெரிய அளவில் தாக்குதலை நடத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்பட மின் உள்கட்டமைப்பு பகுதிகளில் ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி ரஷ்யா கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டு ரஷ்யா நடத்தும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு 99 டோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 10 மாகாணங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா கடந்த […]

உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா மீண்டும் பெரிய அளவில் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்பட மின் உள்கட்டமைப்பு பகுதிகளில் ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி ரஷ்யா கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டு ரஷ்யா நடத்தும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு 99 டோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 10 மாகாணங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்யா கடந்த 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் நீக்ரோ நதியின் குறுக்கே சப்போரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் பெரிய நீர் தேக்க மின் உற்பத்தி நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. இதனால் 7 லட்சம் பேர் வசிக்கும் கார்கிவ் நகரில் மின்னிணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது. உக்ரைனின் போர் திறனை குறைப்பதற்காக அந்நாட்டின் குடிநீர் மற்றும் மின் கட்டமைப்பு மீது ரஷ்யா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu