ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பாலம் ஒன்றை உக்ரைன் தகர்த்துள்ளது.
இந்த பாலத்தை தகர்க்கும் காணொளி காட்சியை விமானப்படை உக்ரைன் விமானப்படை தளபதி மைகோலா வெளியிட்டுள்ளார். வான்னோயி நகர் அருகே இந்த பாலம் தகர்க்கப்பட்டது. இது இரண்டாவது பெரிய பாலம் ஆகும். இந்த தாக்குதல் எப்பொழுது நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. கடந்த ஆறாம் தேதி உக்ரைன் எல்லை பகுதிகளில் படைகள் மற்றும் கவச வாகனங்களை உக்ரைன் அனுப்பி வைத்துள்ளது. ரஷ்ய பகுதிகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த உக்ரைன் முடிவு செய்துள்ளது. இந்த தகர்க்கப்பட்ட பாலம் ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலம் ஆகும். இதற்கிடையே போர்க்ரோஸ் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.














