ரஷியாவின் டிரோன் தாக்குதல்களை எதிர்க்க, உக்ரைன் பெண்கள் படை அமைக்கப்பட்டுள்ளது.
ரஷியா, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு எதிராக தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில், ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷியாவின் டிரோன் தாக்குதல்களை எதிர்க்க, உக்ரைன் பெண்கள் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் குழு, ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருக்கின்றனர். ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க, மாதம் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். உக்ரைன் எல்லையை பாதுகாக்கின்றனர். ஆண்களோடு கைகோர்த்து, 70 பெண்கள் முதற்கட்டமாக பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.














