அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனவரி 20-ஆம் தேதி பதவியில் இருந்து செல்லும் முன், உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்க அனுமதி அளித்தார்.
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியாவின் படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ள நிலையில், உக்ரைன் அமெரிக்காவிடம் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி கேட்டது. ஆனால் அமெரிக்கா இந்த ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதித்திருந்தது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரக்தி அடைந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனவரி 20-ஆம் தேதி பதவியில் இருந்து செல்லும் முன், உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்க அனுமதி அளித்தார். இதற்கிடையில், இது சர்வதேச பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷியா எச்சரித்தது. புதின், இந்த நடவடிக்கை நேட்டோ நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் ரஷியாவுக்கு இடையே நேரடி போரை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.














