உக்ரைன்-ரஷியா போர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி சந்திப்பு

May 14, 2025

அமெரிக்காவுக்கு சென்ற ஜெலன்ஸ்கியை, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார். உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு காலவரம்பில்லாமல் வழங்க […]

அமெரிக்காவுக்கு சென்ற ஜெலன்ஸ்கியை, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.

உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு காலவரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும், உக்ரைனில் தேர்தல்கள் நடத்தாமல், ஜெலன்ஸ்கி தனது பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று, டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அவர் அமெரிக்காவுக்கு சென்று, கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்தார். அதில், ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu