ரஷிய ஆயுதங்களின் 60% பாகங்கள் சீன தயாரிப்பு - உக்ரைன்

September 25, 2024

ரஷிய ஆயுதங்களில் உள்ள வெளிநாட்டு பாகங்களில் 60% சீனாவில் தயாரிக்கப்பட்டவை என உக்ரைன் அரசு தெரிவித்தது. கடந்த மாதம், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் பெரிய நிலப்பரப்பை கைப்பற்றியது, இதனால் இரு நாடுகளுக்கிடையில் மோதல்கள் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இது குறித்து உக்ரைனின் அதிபரின் ஆலோசகர் விளாடிஸ்லவ் விலசியுக் கூறியதாவது, “தாக்குதல்களில் கிடைத்த ஆயுதங்களில் 60% சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நமது உற்பத்தியாளர்களுடன் விவாதங்கள் நடத்தி வருகிறோம். சீனா ஒரு முக்கிய […]

ரஷிய ஆயுதங்களில் உள்ள வெளிநாட்டு பாகங்களில் 60% சீனாவில் தயாரிக்கப்பட்டவை என உக்ரைன் அரசு தெரிவித்தது.

கடந்த மாதம், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் பெரிய நிலப்பரப்பை கைப்பற்றியது, இதனால் இரு நாடுகளுக்கிடையில் மோதல்கள் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

இது குறித்து உக்ரைனின் அதிபரின் ஆலோசகர் விளாடிஸ்லவ் விலசியுக் கூறியதாவது, “தாக்குதல்களில் கிடைத்த ஆயுதங்களில் 60% சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நமது உற்பத்தியாளர்களுடன் விவாதங்கள் நடத்தி வருகிறோம். சீனா ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. மேலும், கண்காணிப்புக்கு தேவையான ஆயுதங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் போன்றவை அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu