கிரீமியா தீபகற்பத்தில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலில் ரஷ்ய போர்க்கப்பல் சேதமடைந்துள்ளது.
உக்ரைன் போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்கின்றன. இதன் மூலம் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் போர்க்கப்பல் ஒன்றை அழித்து உள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி கூறியுள்ளார். கிரீமியா தீபகற்பத்தில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலில் ரஷ்ய போர்க்கப்பல் சேதமடைந்துள்ளது. விமானத்திலிருந்து ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதல் நடத்தினர். இந்த உக்ரைன் விமானங்களை ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின என்றும் இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதாக ரஷ்ய தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் 26 அன்று அதிகாலை ரஷ்ய கடற்படையின் நோவோசேர்க்காஸ் என்ற பெரிய போர்க்கப்பலை உக்ரைன் விமான படை வீரர்கள் தாக்கி அழித்தனர். ரஷ்யாவின் கடற்படை சிறியதாகிக் கொண்டே வருகிறது. இந்த தாக்குதலை வெற்றிகரமாக செயல்படுத்திய விமானப்படை விமானிகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.