உக்ரைனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு ரஷ்ய வீரர்கள் தீ வைத்தனர்.
ரஷ்யா உக்ரைன் போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், முதல்முறையாக உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுமார் 76 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருந்து உக்ரைன் படைகளை வெளியேற்ற ரஷ்யா ராணுவத்தை குவித்துள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு ரஷ்ய வீரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு கரும்புகை உருவாகியது. அனுவிச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என்றும், ரஷ்யா தான் காரணம் என்றும் இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளிடையே தற்போது போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.














