ரஷ்யாவின் டிரோன்கள் ருமோனியா நாட்டு எல்லைக்குள் விழுந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் டான்யூப் ஆற்றில் உள்ள துறைமுகம் மீது நள்ளிரவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரஷ்யாவின் டிரோன்கள் ருமோனியா நாட்டு எல்லைக்குள் விழுந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, "ருமேனியா பகுதியில் ரஷ்யாவில் டிரோன்கள் விழுந்து வெடித்துள்ளது. ருமேனியாவின் குறுக்கே உள்ள டான்யூப் நதியில் உள்ள துறைமுகம் அருகே தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் உள்ளது" என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதை ருமேனியா மறுத்துள்ளது.
இது குறித்து ருமேனியா பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, "ரஷ்ய டிரோன்கள் ருமேனியாவில் விழுந்தது என்ற தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம். ருமேனியாவில் ரஷ்யாவின் தாக்குதல் ராணுவ அச்சுறுத்தல்களை உருவாக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது.














