உக்ரைன் - ரஷ்யா போர் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, உக்ரைனை நோக்கி ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணையை செலுத்தியது. இந்த ஏவுகணையை, உக்ரைன் ராணுவம் இடைமறித்து அழித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணையை உக்ரைன் தாக்கி அளித்துள்ளது இதுவே முதல் முறையாகும். எனவே, இந்த செய்தி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய உக்ரைன் விமானப்படை தளபதி ஒலேஷுக், “கின்ஷால் வகையை சேர்ந்த, கண்டம் விட்டு கண்டம் தாவும் வகையிலான அதிநவீன ஏவுகணையை ரஷ்யா வீசியது. எங்கள் வான் பகுதியில் உள்ள பாதுகாப்பு ஏவுகணை மூலம் இது இடைமறித்து தாக்கி அளிக்கப்பட்டது. அமெரிக்கா அனுப்பிய அதிக செயல்திறன் கொண்ட பேட்டரியாட் வான் பாதுகாப்பு தளவாடம் மூலம் இது சாத்தியமானது” என்று கூறியுள்ளார்.