உக்ரைனில் 40 மில்லியன் டாலா் ஆயுதக் கொள்முதல் ஊழல்

January 29, 2024

போருக்கு தேவையான பீரங்கி குண்டுகள் வாங்குவதில் உக்ரைனில் 40 மில்லியன் டாலர் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஒரு லட்சம் பீரங்கி குண்டுகள் வாங்கியுள்ளது உக்ரைன். அதில் 40 மில்லியன் டாலர் வரை ஊழல் நடந்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு பணி முகமை தெரிவித்துள்ளது. இதில் அந்நாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு […]

போருக்கு தேவையான பீரங்கி குண்டுகள் வாங்குவதில் உக்ரைனில் 40 மில்லியன் டாலர் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஒரு லட்சம் பீரங்கி குண்டுகள் வாங்கியுள்ளது உக்ரைன். அதில் 40 மில்லியன் டாலர் வரை ஊழல் நடந்திருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு பணி முகமை தெரிவித்துள்ளது. இதில் அந்நாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர இருக்கும் இந்த நேரத்தில் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 40 மில்லியன் டாலர் செலவில் ஒரு லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்க லீவ் அர்சனால் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான மொத்த தொகையும் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டது. அந்த நிறுவனத்திடம் இருந்து வெளிநாட்டு நிறுவனத்தின் வணிகப்பிரிவுக்கு அந்த பணத்தை ஊழியர்கள் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இதனால் உக்ரேனுக்கு ஒப்பந்தமிட்ட ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. நாட்டில் உள்ள பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ஒப்பந்த தொகை பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கி கணக்கில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டு நாட்டின் பாதுகாப்பு நிதிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu