உக்ரைனுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ. 8,467 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் அமெரிக்கா வழங்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் உள்ள ரொனால்ட் ரீகன் அதிபர் நூலகத்தில், பாதுகாப்பு நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனுக்கு 988 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று கூறினார். இதில், உயர் இயக்க பீரங்கி ஏவுகணை அமைப்புகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் வெடிமருந்துகள் அடங்கும். இந்த உதவி 'உக்ரைன் பாதுகாப்பு உதவி' முன்முயற்சியின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 725 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் விரைவில் பென்டகன் கையிருப்பிலிருந்து அனுப்பப்படும்.