உக்ரைன் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 29.1% சரிவு

April 13, 2023

கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதன் பின்னர், உக்ரைன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே, உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் 29.1% சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2022 பிப்ரவரிக்கு முன்னதாக, அதாவது போர் ஏற்படுவதற்கு முன்னால், உக்ரைன் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 3.4% அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. […]

கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதன் பின்னர், உக்ரைன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே, உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் 29.1% சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2022 பிப்ரவரிக்கு முன்னதாக, அதாவது போர் ஏற்படுவதற்கு முன்னால், உக்ரைன் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 3.4% அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், உக்ரைன் நாட்டு கட்டுமானங்கள் 67.6% அழிந்துள்ளன. இந்த கட்டுமானங்களை மீண்டும் ஒழுங்கமைத்து எழுப்புவதற்கு, 411 பில்லியன் டாலர்கள் தேவை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu