உக்ரைன் நடத்தும் மெகா டிரோன் தாக்குதல் – ரஷ்யா அதிர்ச்சி

June 2, 2025

அமைதிப் பேச்சுவார்த்திக்குள் பதற்றம்; ரஷ்ய விமான தளங்கள் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. உக்ரைன் பாதுகாப்பு சேவையின் ரகசிய திட்டம், ரஷ்ய விமானப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்திக்குள், உக்ரைன் ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை நடத்தியது. பெலாயா, ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒலென்யா, மாஸ்கோ அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டன. இதில் 40க்கும் மேற்பட்ட […]

அமைதிப் பேச்சுவார்த்திக்குள் பதற்றம்; ரஷ்ய விமான தளங்கள் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
உக்ரைன் பாதுகாப்பு சேவையின் ரகசிய திட்டம், ரஷ்ய விமானப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்திக்குள், உக்ரைன் ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை நடத்தியது. பெலாயா, ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒலென்யா, மாஸ்கோ அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டன. இதில் 40க்கும் மேற்பட்ட Tu-95, Tu-22M3 போர் விமானங்கள், A-50 உளவு விமானம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. டிரோன்கள் லாரிகளில் மறைத்து ஏவப்பட்டன. தங்கள் ஏவுகணை சக்தி இல்லாத நிலையில், உக்ரைன் தற்போது டிரோன் தாக்குதல்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu