பிரிட்டன், பிரான்சு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் பயணம்

February 9, 2023

ரஷியாவுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், ஏவுகணைகளை கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரஷிய படையெடுப்பை முறியடிக்க போர் விமானங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார். இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் அந்நாட்டு ராணுவ தளத்தில் இருந்து செய்தியாளர்கள் சந்திப்பில் […]

ரஷியாவுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், ஏவுகணைகளை கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரஷிய படையெடுப்பை முறியடிக்க போர் விமானங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார். இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் அந்நாட்டு ராணுவ தளத்தில் இருந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, உக்ரைனுக்கு உதவ போர் விமானங்களை வழங்குவது பற்றி, பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இடம் பெற்றது என கூறினார். உக்ரைனுக்கு குறுகிய காலத்தில் ஆயுதங்களை வழங்க வேண்டும். ஆனால், நீண்ட காலத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என சுனாக் கூறினார்.

ஜெலன்ஸ்கி கூறும்போது, விமானங்கள் மட்டுமின்றி, வெடிபொருட்கள் மற்றும் நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து வகையான ஆயுதங்களும் தேவை. அவையின்றி, நல்லது எதுவும் நடைபெறாது. அதன்பின்னர், அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசுக்கு சென்றார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். ஜெர்மனி நாட்டு அதிபர் ஓலப் ஸ்கால்சுடனும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு நடந்தது. கடந்த டிசம்பரில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்ற அவர், அதிபர் பைடனை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ரஷிய போருக்கு பின்னர் ஜெலன்ஸ்கி மேற்கொள்ளும் 2-வது வெளிநாட்டு சுற்று பயணம் இதுவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu