63 ரஷிய வீரர்களை விடுவித்த உக்ரைன் ராணுவம்

February 6, 2023

உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த 63 ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான குடியிருப்புகள், கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த தங்கள் நாட்டைச் சேர்ந்த 63 ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சமரசம் […]

உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த 63 ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான குடியிருப்புகள், கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த தங்கள் நாட்டைச் சேர்ந்த 63 ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் சமரசம் செய்த நிலையில், கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் கைதிகளின் பரிமாற்றத்தை உக்ரைன் தரப்பும் உறுதி செய்துள்ள நிலையில், 116 உக்ரைனிய வீரர்கள் நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சொந்த நாடு திரும்பிய வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu