ரஷ்யாவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - 6 பேர் பலி

May 7, 2024

ரஷ்ய எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். ரஷ்ய எல்லையில் உள்ள பெல்கோரோடு மாகாணத்தில் உக்ரைன் நேற்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அந்த மாகாண கவர்னர் கிளாட்கோவ் கூறியுள்ளார். பெல்கோரோடு மாகாணத்தில் உள்ள பொரிசோஸ்கி மாவட்டத்தில் பெரிசோவ்ஸ்கி கிராமம் உள்ளது. அங்கே ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் அருகே கார் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அதன் மீது உக்ரைன் அனுப்பிய ட்ரோன் தாக்கின. […]

ரஷ்ய எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்ய எல்லையில் உள்ள பெல்கோரோடு மாகாணத்தில் உக்ரைன் நேற்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அந்த மாகாண கவர்னர் கிளாட்கோவ் கூறியுள்ளார். பெல்கோரோடு மாகாணத்தில் உள்ள பொரிசோஸ்கி மாவட்டத்தில் பெரிசோவ்ஸ்கி கிராமம் உள்ளது. அங்கே ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் அருகே கார் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அதன் மீது உக்ரைன் அனுப்பிய ட்ரோன் தாக்கின. இந்த தாக்குதலில் ஆறு பேர் பலியாகினர். இரண்டு குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu