ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் - 15 பேர் பலி

May 13, 2024

ரஷ்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர். உக்ரைன் போர் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ரஷ்யாவில் உள்ள பெல்கோரட் நகரில் உக்ரைன் வான் தாக்குதல் நடத்தியது. அப்போது பத்து தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அருகிலுள்ள […]

ரஷ்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் பலியாகினர்.

உக்ரைன் போர் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ரஷ்யாவில் உள்ள பெல்கோரட் நகரில் உக்ரைன் வான் தாக்குதல் நடத்தியது. அப்போது பத்து தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அருகிலுள்ள பிற குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது பற்றி பெல்கோரட் கவர்னர் ரியாசெஸ்லவ் பேசும்போது, குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நடந்த தாக்குதலில் மூன்று பேர் இறந்தனர். பதினோராம் தேதி நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். உக்ரைனின் தாக்குதலால் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 19 பேர் பலியாகி உள்ளனர் என்றார்.

இதற்கிடையே உக்ரைனின் கார்கில் பகுதியில் உக்ரைன் படைகள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ராணுவ தளபதி கூறியுள்ளார். அங்கு ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு பெயர்ந்துள்ளனர். ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதலே இதற்கு காரணம். முன்னதாக கார்கிவ் பகுதியில் பல கிராமங்களை ஆக்கிரமித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இதற்கு உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu