மத்திய மாநில அரசுடன் உல்பா அமைப்பு அமைதி ஒப்பந்தம்

December 30, 2023

அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசு பல அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அசாமில் 1979 ஆம் ஆண்டு உல்பா என்னும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழு தொடங்கப்பட்டது. இது பழங்குடி அசாமிய மக்களுக்காக தனி நாடு கோரி வன்முறைகளில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்பினை மத்திய அரசு 1990 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் இங்கு செயல்பட்டு வரும் பல்வேறு […]

அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசு பல அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.
அசாமில் 1979 ஆம் ஆண்டு உல்பா என்னும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழு தொடங்கப்பட்டது. இது பழங்குடி அசாமிய மக்களுக்காக தனி நாடு கோரி வன்முறைகளில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்பினை மத்திய அரசு 1990 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் இங்கு செயல்பட்டு வரும் பல்வேறு குழுக்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் இறங்கியதன் பலனாக பல்வேறு அமைப்புகள் அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த வகையில் இந்த உல்பா அமைப்புடன் கடந்த 12 வருடங்களாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் மத்திய மாநில அரசுகள் நடத்தி வந்தன. இதில் அரபிந்தா ராஜ்கோவா தலைமையிலான ஒரு பிரிவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று உல் பா அமைப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உல்பா பிரிவுடன் மத்திய மாநில அரசுகள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu