ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், தனது நிகர லாபத்தில் 38% சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் லாபம் 1058.2 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய், வருடாந்திர அடிப்படையில் 19.5% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த காலாண்டில் நிறுவனத்தின் இயக்கம் மூலமாக கிடைத்த வருவாய் 15520.93 கோடியாக பதிவாகியுள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 116.75 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த காலாண்டில், ரெடிமிக்ஸ் கான்கிரீட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 50% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், இதர உயர்தர பொருட்கள் விற்பனை 18.8% உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர கடன் மதிப்பு வருடாந்திர அடிப்படையில் 8357 கோடியிலிருந்து 7722 கோடியாக சரிந்துள்ளது. ஆனால், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த கணிப்பை விட சற்று குறைவாகவே வருவாய் மற்றும் லாபம் ஆகியவை பதிவாகியுள்ளதாக அல்ட்ராடெக் சிமெண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.